< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் புகார்.. திடீரென வைரலாகும் 2 வீடியோக்கள்
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் புகார்.. திடீரென வைரலாகும் 2 வீடியோக்கள்

தினத்தந்தி
|
6 Jan 2024 1:12 PM IST

பார்மரைச் சேர்ந்த மேவாராம் ஜெயின் உள்ளிட்ட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண் புகார் அளித்தார்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது அவரது 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பார்மரைச் சேர்ந்த மேவாராம் ஜெயின் உள்ளிட்ட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண் புகார் அளித்தார். அதில், மேவாராம் ஜெயின் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். அதில், இரண்டு ஆபாச வீடியோக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இப்போது வெளியாகியுள்ள வீடியோக்கள் அதே வழக்கு தொடர்பானவை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்