< Back
தேசிய செய்திகள்
கற்பழிப்பு வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது
தேசிய செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது

தினத்தந்தி
|
13 Aug 2023 12:15 AM IST

பெங்களூருவில் கற்பழிப்பு வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் கற்பழிப்பு வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டு உள்ளார்.

கன்னட நடிகர்

கன்னட நடிகரும், இயக்குனருமாக இருந்து வருபவர் வீரேந்திர பாபு. இவருக்கு, பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த சமயத்தில் வீரேந்திர பாபு, அந்த பெண்ணை தனிமையில் அழைத்து சென்று கற்பழித்துள்ளார். மேலும் அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து இருக்கிறார். இதுகுறித்து அறிந்த அந்த பெண், வீரேந்திர பாபுவுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது தனக்கு ரூ.15 லட்சம் கொடுக்குமாறும், இல்லையென்றால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண், தனது நகைகளை அடகு வைத்து வீரேந்திர பாபுவுக்கு பணம் கொடுத்துள்ளார். எனினும் அவர் கூடுதல் பணம் கேட்டு அவரை தொல்லை செய்துள்ளார்.

கைது

கடந்த 30-ந் தேதி, வீரேந்திர பாபு, தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை பறித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடிகேஹள்ளி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீரேந்திரபாபு மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்