< Back
தேசிய செய்திகள்
வீட்டிற்குள் புகுந்து இளம்பெண் பலாத்காரம்
தேசிய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து இளம்பெண் பலாத்காரம்

தினத்தந்தி
|
26 Jun 2023 3:30 AM IST

வீட்டிற்குள் புகுந்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரு:

வீட்டிற்குள் புகுந்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் பலாத்காரம்

பெங்களூரு மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். அவருக்கு வாய்பேச முடியாதவர் ஆவார். மேலும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். அப்போது அந்த பெண் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அந்த சமயத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்தார்.

அவர் அந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த நிலையில் மாலையில் வீட்டிற்கு பெற்றோர் வந்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் மகள் சோர்ந்து இருந்தார். உடனே தங்கள் மகளிடம் அவர்கள் கேட்டனர். ஆனால் அவரால் ஒன்றும் கூறமுடியவில்லை. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது.

கண்காணிப்பு கேமரா

இதையடுத்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் இருந்து மர்மநபர் வெளியே ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்