திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர்
|திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தாவணகெரே:
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காதல்
தாவணகெரே (மாவட்டம்) புறநகர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் இருக்கிறாள். சிறுமியின் வீட்டின் அருகேயே ஒரு வாலிபர் வசித்து வருகிறார். 2 பேரும் ஒரே பகுதியில் வசித்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில், சிறுமியை திருமணம் செய்வதாக அந்த வாலிபர் கூறியுள்ளார்.
மேலும் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை, அந்த வாலிபர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறுமியை, அவளது பெற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
கர்ப்பம்
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி விசாரித்த போது தான் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர், அவளை கற்பழித்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுபற்றி தாவணகெரே மகளிர் போலீஸ் நிலையத்தில் வாலிபர் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதுபற்றி அறிந்த வாலிபர் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, தாவணகெரே மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.