< Back
தேசிய செய்திகள்
மைனர் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை
தேசிய செய்திகள்

மைனர் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
6 April 2023 2:36 AM IST

கொள்ளேகால் அருகே மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக காதலனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

கொள்ளேகால்:

கொள்ளேகால் அருகே மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக காதலனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

மைனர் பெண் மாயம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகா தாலுகா சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மைனர் பெண்ணை தேடி அலைந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மைனர் பெண்ணின் வீட்டில் வாடகைக்கு இருந்த மாதேஷ் மீது பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை தேடியபோது, மாதேஷ் மாயமாகியிருந்தார்.

இதையடுத்து மாதேஷ் தனது மகளை கடத்தி சென்றதாக மைனர் பெண்ணின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மைனர் பெண் குறித்து விசாரித்து வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து மைனர் பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில், மைனர் பெண் பெங்களூரு கோணனகுண்டே கிராஸ் அஞ்சனாபுராவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

பெண் மீட்பு, காதலன் கைது

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மைனர் பெண்ணை மீட்டு வந்தனர். பின்னர் போலீ்ஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மைனர் பெண், மாதேசை நான் கடந்த 3 ஆண்டாக காதலித்து வருகிறேன். இந்நிலையில் இறுதி தேர்வின்போது, என்னை அவர், வீட்டிற்கு தெரியாமல் பெங்களூரு அழைத்து சென்றார். அங்கு வாடகை வீடு ஒன்றில் என்னை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

அங்கிருந்து தப்பி வருவதற்கு முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. காதல் என்ற பெயரில் மாதேஷ் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று கூறினார். இதையடுத்து கேட்ட போலீசார், மைனர் பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பின்னர் மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாதேஷை கைது செய்தனர். மேலும் மாதேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்