< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் மசாஜ் சென்டரில் இளம்பெண்ணை கற்பழித்த நபர் கைது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் மசாஜ் சென்டரில் இளம்பெண்ணை கற்பழித்த நபர் கைது

தினத்தந்தி
|
25 Feb 2023 2:08 AM IST

பெங்களூருவில் மசாஜ் சென்டரில் இளம்பெண்ணை கற்பழித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் உள்ளது. அங்கு 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். அந்த மசாஜ் சென்டரின் பெண் உரிமையாளருக்கும், ரவீந்திர ஷெட்டி (வயது 42) என்பவருக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது. இதன்காரணமாக மசாஜ் சென்டருக்கு ரவீந்திர ஷெட்டி அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், மசாஜ் சென்டரில் இளம்பெண் தனியாக இருக்கும் போது வந்த, ரவீந்திர ஷெட்டி இளம்பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் ரவீந்திர ஷெட்டி மிரட்டல் விடுத்திருந்ததாக தெரிகிறது. இதனால் நடந்த சம்பவங்கள் பற்றி அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். பின்னர் தனது குடும்பத்தினரிடம் இளம்பெண் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் ரவீந்திர ஷெட்டி மீது இளம்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திர ஷெட்டியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்