< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் சிறுமியை தாயாக்கிய கணவர் போக்சோவில் கைது
தேசிய செய்திகள்

மைசூருவில் சிறுமியை தாயாக்கிய கணவர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
30 Dec 2022 3:53 AM IST

மைசூருவில் சிறுமியை குழந்தை திருமணம் செய்து தாயாக்கிய அவளது கணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமி பிரசவத்திற்காக சென்றபோது அவர் சிக்கினார்.

மைசூரு:

மைசூருவில் சிறுமியை குழந்தை திருமணம் செய்து தாயாக்கிய அவளது கணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமி பிரசவத்திற்காக சென்றபோது அவர் சிக்கினார்.

சிறுமிக்கு பிரசவம்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா பிளிகெேர பகுதியை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமியை, அவளது பெற்றோர் பிரசவத்திற்காக மைசூருவில் உள்ள செலுவாம்பா மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சிறுமியின் வயது குறித்து டாக்டர்கள், அவளது பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு 15 வயது தான் நிரம்பியதும், அவளை பெற்றோர் வாலிபர் ஒருவருக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கணவர் கைது

அதன்பேரில் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, 15 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பிளிகெரே போலீசில் அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தாயாக்கிய அவளது கணவரை கைது செய்தனர்.

மேலும் சிறுமியின் பெற்றோர், வாலிபரின் பெற்றோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியையும், அவள் பெற்றெடுத்த குழந்தையையும் அதிகாரிகள் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்