< Back
தேசிய செய்திகள்
பலாத்காரம், கொடூர தாக்குதல், துப்பாக்கி சூடு... தப்பி சென்ற குற்றவாளிக்கு நேர்ந்த கதி
தேசிய செய்திகள்

பலாத்காரம், கொடூர தாக்குதல், துப்பாக்கி சூடு... தப்பி சென்ற குற்றவாளிக்கு நேர்ந்த கதி

தினத்தந்தி
|
27 Feb 2024 9:55 AM IST

காவல் நிலையத்திற்கு 20 மீட்டர் தொலைவிலேயே இளம்பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில் சில நாட்களுக்கு முன் சென்று கொண்டு இருந்துள்ளார்.

அவர்களை 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து உள்ளது. இதில், ராஜேந்திர யாதவ் என்ற முக்கிய குற்றவாளி இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவருடைய கூட்டாளிகளான மஹிபால் குஜ்ரால் மற்றும் ராகுல் குஜ்ரால் ஆகிய இருவரும் கோடாரியை கொண்டு இளம்பெண்ணை பின்னால் இருந்து கடுமையாக தாக்கி உள்ளனர்.

அவரது சகோதரர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், இளம்பெண்ணின் தலை, கால்கள், கைகள் மற்றும் தோள் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. சம்பவத்திற்கு பின்னர் 3 பேரும் தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதல் ஆனது, காவல் நிலையத்திற்கு 20 மீட்டர் தொலைவிலேயே நடந்துள்ளது.

இந்நிலையில், ராஜேந்திராவின் கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், ராஜேந்திரா படுகாயங்களுடன் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

அவர் விபத்தில் சிக்கினாரா? அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது தெளிவாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். அவர் ஓடி கொண்டிருந்த ரெயில் முன்பு வந்ததில், கால் ஒன்றை இழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023-ம் ஆண்டு ஜூனில் ராஜேந்திராவுக்கு எதிராக இளம்பெண் பலாத்கார புகார் அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதுடன் வேலையையும் இழந்து விட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர், வழக்கை வாபஸ் பெறும்படி இளம்பெண்ணை மிரட்ட தொடங்கினார். ஆனால், அதற்கு மறுக்கவே ஆத்திரமடைந்த அவர் இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்