< Back
தேசிய செய்திகள்
பலாத்கார முயற்சி... பெண்ணின் அதிரடி நடவடிக்கை; அதிர்ந்த போலீசார்
தேசிய செய்திகள்

பலாத்கார முயற்சி... பெண்ணின் அதிரடி நடவடிக்கை; அதிர்ந்த போலீசார்

தினத்தந்தி
|
18 Nov 2023 7:14 PM IST

வேலைக்காரரின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

கவுசாம்பி,

உத்தர பிரதேசத்தில் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்திற்கு பரபரப்பாக ஓடி வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை காட்டியதும் போலீசார் அதிர்ச்சியடைந்து நின்றனர்.

அந்த பெண் போலீசிடம் கூறும்போது, அவருடைய கணவர் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக வசிக்கிறார் என்றும் வீட்டு வேலைக்காக 23 வயது நபர் ஒருவர் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று, வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத சூழலில், வேலைக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். எனினும், அதில் இருந்து தப்பினேன் என கூறியுள்ளார்.

அதன்பின்னரே, அவருடைய அந்தரங்க உறுப்புகளை அறுத்து போலீசிடம் கொண்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அந்த நபரை மீட்டு பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அந்த நபர் போலீசில் வேறு வகையான விசயங்களை கூறியுள்ளார். அந்த பெண்ணுக்காக சிறுவயது முதல் வேலை செய்து வருகிறேன் என்றும் சம்பவம் நடந்த அன்று, அவரை அழைத்த அந்த பெண், மயக்கமடைய செய்துள்ளார்.

அதன்பின் அந்தரங்க உறுப்புகளை துண்டித்து சென்றுள்ளார் என கூறியுள்ளார். அந்த வேலைக்காரரின் தந்தை அளித்த புகாரின் பேரில், அந்த பெண்ணுக்கு எதிராக போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். பின்பு அந்த பெண் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்