< Back
தேசிய செய்திகள்
பலாத்காரம்; மதம் மாற்ற, கொலை செய்ய முயற்சி... மும்பை மாடல் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

பலாத்காரம்; மதம் மாற்ற, கொலை செய்ய முயற்சி... மும்பை மாடல் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
31 May 2023 6:21 PM IST

மும்பை போலீசில் மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்ததுடன், தன்னை மதம் மாற்றவும், கொலை செய்யவும் அந்த நபர் முயன்றார் என பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ராஞ்சி,

மராட்டியத்தின் மும்பை நகரை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், மும்பையின் வெர்சோவா நகர காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அதில், தன்வீர் அக்தர் முகமது லேக் கான் என்ற ராஞ்சி நகரை சேர்ந்த நபர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதுடன், மிரட்டியும் உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புகாரில், அந்த நபரின் மாடலிங் துறை ஏஜென்சியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்தேன். தொடக்கத்தில், தனது பெயர் யாஷ் என என்னிடம் கூறினார். 4 மாதங்களுக்கு பின், அவரது உண்மையான பெயர் தன்வீர் அக்தர் என எனக்கு தெரிய வந்தது.

எனது புகைப்படங்களை என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பியும், என்னுடைய சமூக ஊடக பதிவுகளுக்கு விமர்சனங்களையும் வெளியிட்டார். அவரை திருமணம் செய்யும்படியும், மதம் மாறவும் என் மீது நெருக்கடி தரப்பட்டது. மும்பையில் என்னை கொல்லவும் முயன்றார்.

தி கேரளா பைல்ஸ் படம் பார்த்த பின்னர், அவருக்கு எதிராக புகார் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது என தெரிவித்து உள்ளார். அவரது மாடலிங் ஏஜென்சியில் 15 நாள் பயிற்சி இருக்கும் என கூறினர். அதில் சேர்ந்த பின், பயிற்சி நீண்ட நாட்களுக்கு இருக்கும் என என்னிடம் பின்னர் கூறப்பட்டது.

நான் பணிபுரியும் இடம் பற்றி அறிந்து, தொடர்பு கொண்டு, நான் அவருடைய மனைவி என்றும் இனி நான் வேலை செய்ய வரமாட்டேன் என்றும் கூறியுள்ளார் என்று புகாரில் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கு ராஞ்சி நகர போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்