பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெறுவாரா? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
|நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
பெங்களூர்,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்றது. நேற்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.தொடர் ஓட்டம் போல் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக்கணிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்தன.
நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் மத்தியில் மீண்டும் பா. ஜனதாவே ஆட்சி அமைக்கும் என்று கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியுள்ளன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்னா ஹசன் தொகுதியில் வெற்றி பெறுவார் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.