< Back
தேசிய செய்திகள்
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
தேசிய செய்திகள்

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

தினத்தந்தி
|
14 Jun 2024 10:18 AM IST

பிரஜ்வல் ரேவண்ணா மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு வழக்கில் ஏற்கனவே போலீசார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. பின்னர் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து, பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பதிவான பலாத்கார வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காமல் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் தன் மீதான பலாத்கார வழக்கில் முன்ஜாமீன் கோரி பெங்களூரு கோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்