< Back
தேசிய செய்திகள்
ரமலான் பண்டிகை: புதுச்சேரி மாநிலத்தில் நாளை அரசு விடுமுறை
தேசிய செய்திகள்

ரமலான் பண்டிகை: புதுச்சேரி மாநிலத்தில் நாளை அரசு விடுமுறை

தினத்தந்தி
|
21 April 2023 11:31 PM IST

ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது, ரமலான் மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்