< Back
தேசிய செய்திகள்
ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசு விளக்கம்
தேசிய செய்திகள்

ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசு விளக்கம்

தினத்தந்தி
|
13 Dec 2023 8:56 AM IST

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது.

புதுடெல்லி,

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்வி ஒன்றுக்கு மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி எழுத்துமூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. அதேநேரம் கடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்கும் பரிந்துரை எதுவும் தற்போது நிலுவையில் இல்லை' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்