< Back
தேசிய செய்திகள்
ராமநவமி கொண்டாட்ட வன்முறை: மேற்கு வங்காளத்திடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ராமநவமி கொண்டாட்ட வன்முறை: மேற்கு வங்காளத்திடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு

தினத்தந்தி
|
4 April 2023 9:28 PM GMT

ராமநவமி கொண்டாட்ட வன்முறை தொடர்பாக மேற்கு வங்காளத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் கடந்த 30-ந் தேதி ராமநவமியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக 30-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போசிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார். இந்தநிலையில், ஹவுரா வன்முறை தொடர்பாக மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.

மேலும் செய்திகள்