< Back
தேசிய செய்திகள்
சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள ராஜமுந்திரி சிறையின் முன்பு செல்பி எடுத்த ராம் கோபால் வர்மா..!
தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள ராஜமுந்திரி சிறையின் முன்பு செல்பி எடுத்த ராம் கோபால் வர்மா..!

தினத்தந்தி
|
28 Oct 2023 12:37 AM IST

சிறை வளாகத்தின் முன்பு இயக்குனர் ராம் கோபால் வர்மா செல்பி புகைப்படம் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறை வளாகத்தின் முன்பு நின்று பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "ராஜமுந்திரி சிறையுடன் ஒரு செல்பி... அவர்(சந்திரபாபு நாயுடு) உள்ளே, நான் வெளியே" என்று பதிவிட்டுள்ளார். சிறை வளாகத்தின் முன்பு இயக்குனர் ராம் கோபால் வர்மா செல்பி புகைப்படம் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்