< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சுஜித் குமார்
|6 Sept 2024 1:38 PM IST
எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித் குமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி,
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி. சுஜித் குமாரை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜித் குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரிடம் அவர் கொடுத்துள்ளார். தற்போது அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.
எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித் குமார் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.