புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்
|புதிய நாடாளுமன்ற வளாகத்தில் கஜ் துவார் என அழைக்கப்படும் நுழைவு வாயிலில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
புதுடெல்லி,
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்தார். நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஜோஷி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
ஐதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (18-ஆம் தேதி) தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தொடர் முதலில் பழைய கட்டிடத்தில் தொடங்கி பின்னர் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.