< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி:  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
13 March 2023 9:06 AM GMT

பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முதல்நாளே நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில். கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து எழுப்பினர்.

அதனைதொடர்ந்து அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார்.

தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தைக் குறை கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். ராகுல்காந்தி மன்னிப்புகேட்க பாஜக வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியும் முழக்கமிட்டதால் கடும் அமளி ஏற்பட்டது.

ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு சர்ச்சையை பாஜக எழுப்பியதால் இருஅவைகளும் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்