< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் உள்ள ராஜபாதையின் பெயர் 'கடமை பாதை' என்று மாற்றம்
|6 Sept 2022 6:26 AM IST
டெல்லியில் உள்ள ராஜபாதையின் பெயரை ‘கடமை பாதை’ என்று மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை வரலாற்று சிறப்புமிக்கது. குடியரசு தின அணிவகுப்பு, அந்த பாதையில்தான் நடப்பது வழக்கம். தற்போது, ராஜபாதையை மறுசீரமைப்பது, புதிய நாடாளுமன்றம் கட்டுவது உள்ளிட்ட சென்டிரல் விஸ்டா பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், ராஜபாதையின் பெயரை 'கடமை பாதை' என்ற பொருளை குறிக்கும்வகையில், 'கர்த்தவ்ய பாத்' என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சிலையில் இருந்து ஜனாதிபதி மாளிகைவரை உள்ள ஒட்டுமொத்த சாலையும், பகுதிகளும் 'கர்த்தவ்ய பாத்' என்று அழைக்கப்பட உள்ளது.
இந்த பெயர் மாற்றம் செய்வதற்காக, புதுடெல்லி மாநகராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதில், பெயர் மாற்ற தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.