இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு!
|பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மலேசிய மந்திரி ஹிஷாமுதின் ஆகியோர் இன்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுடெல்லி,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மலேசிய பாதுகாப்புத் துறையின் மூத்த மந்திரி ஹிஷாமுதின் ஹுசைன் ஆகியோர் இன்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு, பிராந்திய மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே வலுவாக உள்ள இந்தியா-மலேசியா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தை இரு மந்திரிகளும் வெளிப்படுத்தினர்.
தற்போதுள்ள மலேசிய இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டத்தின் (மிட்காம்) கட்டமைப்பின் கீழ் அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த மிட்காம் கூட்டம், ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, சமாதானம் மற்றும் அமைதி முயற்சிகளில் பெண் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை மலேசிய மந்திரி வெளிப்படுத்தினார். பெண் பணியாளர்களை ஈடுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கான திறனை மேம்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்தியாவும் மலேசியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளன