< Back
தேசிய செய்திகள்
ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
தேசிய செய்திகள்

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

தினத்தந்தி
|
12 July 2022 5:51 AM IST

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான ஆர்.பி.ரவிச்சந்திரன் தமிழக கவர்னர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அப்போது நீதிபதிகள், பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்