< Back
தேசிய செய்திகள்
டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரி ராஜினாமா
தேசிய செய்திகள்

டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரி ராஜினாமா

தினத்தந்தி
|
17 March 2023 12:22 AM IST

டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி,

பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று டி.சி.எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். இதன் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் இருந்து வந்தார்.

அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக கே.கிரித்திவாசன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'டி.சி.எஸ் உடன் 22 ஆண்டுகளுக்கும் மேலான பணி வாழ்க்கை மற்றும் கடந்த 6 ஆண்டுகளில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக வெற்றிகரமான பணியாற்றிய ராஜேஷ் கோபிநாதன் தனது பிற நலன்களைத் தொடர நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அவர் வரும் செப்டம்பர் 15 வரை, வழிகாட்டியாக தொடர்வார்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தலைமை செயல் அதிகாரியான கிரித்திவாசன், அந்த நிறுவனத்தின் வங்கி, நிதி சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் பிரிவின் உலகளாவிய தலைமைப் பதவியை வகித்து வந்தவர் ஆவார்.

அவர் இன்று முதல் உடனடியாக பொறுப்புக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்