ராஜஸ்தான்: ஐ.சி.யூ.வில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் - மருத்துவ உதவியாளர் கைது
|ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மருத்துவ உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின், 24 வயது இளம்பெண் ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில்(ஐ.சி.யூ.) இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவ உதவியாளர் சிராக் யாதவ் என்ற நபர், இன்று அதிகாலை 4 மணியளவில் ஐ.சி.யூ.வுக்குச் சென்று அங்கு சிகிச்சையில் இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் கூச்சலிட முயன்றபோது அவருக்கு சிராக் யாதவ் மயக்க ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மயக்கம் தெளிந்த பிறகு தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து இளம்பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தார் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மருத்துவ உதவியாளர் சிராக் யாதவ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.