< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று

தினத்தந்தி
|
20 Dec 2023 9:46 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.

ஜெயப்பூர்,

ராஜஸ்தானில் இருவர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 292 பேர் தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.ஏற்கனவே தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் மாவட்டத்தில் பாபர்மர்கா, மஸ்தூர் படா ஆகிய பகுதிகளில் 2 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநில அரசும் தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து

உள்ளது. டெல்லியில் புதிதாக 4 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்