< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான்: மருத்துவமனை வாசலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் - 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: மருத்துவமனை வாசலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் - 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
5 April 2024 6:16 AM IST

மருத்துவமனை வாசலில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் தொடர்பாக 3 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கன்வாடியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவக் கல்வி துணை செயலாளர் சுப்ரா சிங் உத்தரவிட்டார். இந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்