< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் கவர்ச்சி திட்டங்களை அள்ளி வீசிய காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை அவரின் தாயாரே  நம்பமாட்டார் - பாஜக கிண்டல்
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கவர்ச்சி திட்டங்களை அள்ளி வீசிய காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை அவரின் தாயாரே நம்பமாட்டார் - பாஜக கிண்டல்

தினத்தந்தி
|
17 Nov 2023 9:42 PM IST

ராஜஸ்தானில் தீவிர பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை அவரின் தாயார் சோனியா காந்தியே நம்பமாட்டார் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற 25-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ராஜஸ்தானில் தீவிர பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜகவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வகர்மா,

" காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குறுதிகளை அளித்தது யார்? ராகுல் காந்தி. அவரின் வாக்குறுதிகளை யார் எடுத்துக்கொள்வார்கள்? அவரின் தாயாரான சோனியா காந்தியே வாக்குறுதிகளை நம்பமாட்டார். அவரின் வாக்குறுதிகளுக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது. அவரின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்பவரைக் காட்டுங்கள்" என கடுமையாக விமர்சித்தார்.

மேலும் செய்திகள்