20 முறை தோல்வியடைந்தும் அசராமல் களமிறங்கும் ராஜஸ்தான் தேர்தல் மன்னன்
|2008ல் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 938 வாக்குகள் பெற்றதே அவர் இதுவரை பெற்ற அதிக வாக்குகள்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 50 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் தீதர் சிங் (வயது 78) கவனம் பெற்றுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர் தீதர் சிங், 1970களில் இருந்து போட்டியிடுகிறார். பஞ்சாயத்து தேர்தல் முதல் மக்களவை தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். போட்டியிடும் ஒவ்வொரு தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டையும் இழந்துள்ளார். அதிகபட்சமாக 2008ல் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 938 வாக்குகள் பெற்றார். இருப்பினும் பின்வாங்கவில்லை. இந்த முறை கரன்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுவரை 20 தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகும் ஏன் போட்டியிடுகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டதற்கு 'ஏன் போட்டியிடக் கூடாது?' என எதிர்கேள்வி எழுப்புகிறார் தீதர் சிங்.
தன்னைப் போன்ற நிலமற்ற மற்றும் ஏழைத் தொழிலாளிகளுக்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.