< Back
தேசிய செய்திகள்
மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச்சென்ற கொடூர நபர் - அதிர்ச்சி வீடியோ
தேசிய செய்திகள்

மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச்சென்ற கொடூர நபர் - அதிர்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
13 Aug 2024 1:00 PM IST

மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென்ற இழுத்துச்சென்ற நபர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம் (வயது 32). மதுபோதைக்கு அடிமையான இவர் மதுகுடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மதுபோதையில் இருந்த பிரேமராம் தனது மனைவியை மீண்டும் தாக்கியுள்ளார். பின்னர், தனது பைக்கில் மனையின் கைகளை கட்டிய பிரேமராம் தரதரவென இழுத்துச்சென்றுள்ளார். பைக்கை பிரேமராம் ஓட்டிச்செல்ல அவரது மனைவி தரையில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேமராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் செய்திகள்