ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: 4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
|ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
ஜெய்ப்பூர்,
200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 95 பேரின் பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியல் 3 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. சார்பில் முதற்கட்டமாக 41 வேட்பாளர்களும், 2-ம் கட்டமாக 83 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் 21 பேரின் பெயர்களைக் கொண்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 56 வேட்பாளர்கள் கொண்ட 4ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.