< Back
தேசிய செய்திகள்
பதவி ஏற்கும் முன் பெற்றோருக்கு பாத பூஜை செய்த ராஜஸ்தான் முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

பதவி ஏற்கும் முன் பெற்றோருக்கு பாத பூஜை செய்த ராஜஸ்தான் முதல்-மந்திரி

தினத்தந்தி
|
15 Dec 2023 11:59 PM IST

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக பதவியேற்ற பாஜகவைச் சேர்ந்த பஜன்லால் சர்மா, பதவி ஏற்கும் முன் தனது தாய், தந்தையரின் பாதங்களை கழுவி பூஜித்தார்.ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா, துணை முதல்-மந்திரிகளாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் பதவியேற்கும் முன்பாக பஜன்லால் சர்மா, பெற்றோர் வீட்டிற்கு சென்று தாய், தந்தையரின் பாதங்களை கழுவி பூஜை செய்தார். அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.

மேலும் செய்திகள்