< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் முதல் - மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி
|6 March 2024 4:41 PM IST
ராஜஸ்தான் முதல் - மந்திரி பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல் - மந்திரியாக இருப்பவர் அக்கட்சியை சேர்ந்த பஜன்லால் சர்மா.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் தனிமையில் இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுகிறேன். மேலும் வரவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மெய்நிகர் ஊடகம் மூலம் பங்கேற்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.