< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் இந்து மத நூல்களை எரித்த 3 பேர் கைது
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இந்து மத நூல்களை எரித்த 3 பேர் கைது

தினத்தந்தி
|
28 Dec 2022 9:06 AM IST

ராஜஸ்தானில் இந்து மத நூல்களின் பக்கங்களை எரிக்கும் வீடியோ வைரலானதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பார்மர்,

ராஜஸ்தானில் இந்து மத நூல்களின் பக்கங்களை எரிக்கும் வீடியோ வைரலானதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் நர்பத் சிங் கூறும்போது, இந்து மத நூல்களில் சில பக்கங்களை எரிக்கும் வீடியோ வைரலானதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 25-ந்தேதி புத்த தீட்சை விழா நடைபெற்ற பின்னர் இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்