< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்தாக்கரேக்கு இன்று அறுவை சிகிச்சை?
|1 Jun 2022 2:58 AM IST
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்தாக்கரேக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை,
நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே (வயது53) சமீபத்தில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வருகிற 5-ந் தேதி அயோத்தி சென்று ராமரை வழிபட இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இடுப்பு மற்றும் முழங்கால் வலி காரணமாக அயோத்தி பயணத்தை ரத்து செய்வதாக திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆளும் கூட்டணி கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாக்கியது.
இந்த நிலையில் ராஜ்தாக்கரே நேற்று மும்பை லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ராஜ்தாக்கரேக்கு இன்று (புதன்கிழமை) இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.