வேட்பாளரை திரும்ப பெற்ற பா.ஜனதா; பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே நன்றி
|அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜனதா திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
மும்பை,
அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என பா.ஜனதா, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.
இந்தநிலையில் பா.ஜனதா அந்தேரி கிழக்கு தொகுதியில் நிறுத்தி இருந்த வேட்பாளரை திரும்ப பெற்றது. இதையடுத்து பா.ஜனதா சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த முர்ஜி பட்டேல் அதை திரும்ப பெற்றார்.
இந்தநிலையில் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜனதா திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், " நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு இருப்பது அவசியமாகும். இதுபோன்ற நல்ல கலாச்சாரம் பரவ நவநிர்மாண் சேனா எப்போதும் ஆதரவாக இருக்கும். எனது கோரிக்கைக்கு செவி கொடுத்தற்கு நன்றி. " என கூறியுள்ளார்.