< Back
தேசிய செய்திகள்
ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

தினத்தந்தி
|
10 Sept 2022 11:06 PM IST

ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ராய்ப்பூர்:

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவம் பவார் (20) என்பவர் ராய்ப்பூர் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் வகுப்பில் கலந்து கொண்ட அவர் பிறகு தனது விடுதி அறைக்கு திரும்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து மற்ற மாணவர்கள் விடுதிக்கு சென்று பார்த்த போது அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்