< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் நாளை 6 மாவட்டங்களில் மழை தீவிரமடையும் - வானிலை மையம் எச்சரிக்கை
தேசிய செய்திகள்

'கேரளாவில் நாளை 6 மாவட்டங்களில் மழை தீவிரமடையும்' - வானிலை மையம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
18 Jun 2023 10:19 PM IST

நாளை 6 மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை 6 மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரையிலான கனமழை பெய்யக்கூடும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்