< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐதராபாத்தில் தீவிரமடையும் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
|13 Oct 2022 11:12 PM IST
ஐதராபாத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மண்டலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது
ஐதராபாத்,
ஐதராபாத்தில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐதராபாத், சார்மினார், கைரதாபாத், குகட்பள்ளி, எல்பி நகர், செகந்திராபாத் மற்றும் செரிலிங்கம்பள்ளி ஆகிய 7 மண்டலங்களிலும் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.