< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்
|16 Sept 2023 11:52 PM IST
சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.