< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை! பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு!
தேசிய செய்திகள்

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை! பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு!

தினத்தந்தி
|
30 May 2022 12:33 PM GMT

டெல்லியில் வீசிய பலத்த காற்றால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார புறநகர் என் சி ஆர் பகுதிகளில், இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அல்லது தீவிர மழை பெய்யக்கூடும் மற்றும் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை டெல்லி, நொய்டா மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து மக்களுக்கு விடிவுகாலம் கிடைத்தது.

இந்த மோசமான வானிலை காரணமாக விமான நேரம் தாமதமாகலாம். டெல்லியில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக, விமான நடவடிக்கைகளை பாதிக்கப்படலாம் என்று இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளை எச்சரித்துள்ளது.

டெல்லியில் வீசிய பலத்த காற்றால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்றும் தலைநகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, இடியுடன் கூடிய கனமழையால் டெல்லியில் மரங்கள் வேரோடு சாய்ந்து விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்