< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை: கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து
|31 March 2024 11:19 PM IST
அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விமான நிலையத்தில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது.
கவுகாத்தி,
திடீர் கனமழை மற்றும் சூரை காற்றினால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது, இதனால் விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் அதிகாரிகள் ஆறு விமானங்களை வேறு இடங்களுக்கு திருப்பிவிட்டனர். விமான நிலைய முனையத்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.
இந்நிலையில் புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக விமானநிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.