< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் 5 ஆண்டுகளுக்கு பின்பு ஆகஸ்டு மாதத்தில் 239 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 5 ஆண்டுகளுக்கு பின்பு ஆகஸ்டு மாதத்தில் 239 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது

தினத்தந்தி
|
30 Aug 2022 3:45 AM IST

பெங்களூருவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் ஆகஸ்டு மாதத்தில் ௨௩௯ மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் ஆகஸ்டு மாதத்தில் பெங்களூருவில் தற்போது அதிக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பெங்களூருவில் இந்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி வரை 239 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் ஆகஸ்டு மாதத்தில் 351 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருந்தது.

பெங்களூருவில் கடந்த 2014-ம் ஆண்டு 102.4 மில்லி மீட்டரும், 2015-ம் ஆண்டு 110 மில்லி மீட்டரும், 2016-ம் ஆண்டு 82.8 மில்லி மீட்டரும், 2017-ம் ஆண்டு 351 மில்லி மீட்டரும், 2018-ம் ஆண்டு 158.3 மில்லி மீட்டரும், 2019-ம் ஆண்டு 146.8 மில்லி மீட்டரும், 2020-ம் ஆண்டு 75.9 மில்லி மீட்டரும், 2021-ம் ஆண்டு 98.5 மில்லி மீட்டரும், 2022-ம் ஆண்டு 239 மில்லி மீட்டர் மழையும் பெய்திருக்கிறது.

மேலும் செய்திகள்