< Back
தேசிய செய்திகள்
சதாப்தி விரைவு ரெயிலில் பயணம் செய்த மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்...!
தேசிய செய்திகள்

சதாப்தி விரைவு ரெயிலில் பயணம் செய்த மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்...!

தினத்தந்தி
|
19 March 2023 5:53 PM IST

சதாப்தி விரைவு ரெயிலில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்தார்.

புதுடெல்லி,

டெல்லி ரெயில் நிலையத்திற்கு இன்று திடீரென வருகை தந்த மத்திய ரெயில்வேதுறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் டெல்லி - அஜ்மெர் சாதாப்தி விரைவு ரெயிலில் பயணிகளுடன் பயணம் செய்தார்.

இந்த பயணத்தின் போது, மந்திரியிடம் பயணிகள் தங்களின் ரெயில் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் பயணிகளின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

இதில் பெரும்பாலானோர் முன்பு இருந்ததை விட தற்போது ரெயில் பயணம் திருப்திகரமாக இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளதாக மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்