< Back
தேசிய செய்திகள்
3 மாதங்களில் சொத்து ஏலம் மூலம் ரூ.844 கோடி வருவாய் - ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

3 மாதங்களில் சொத்து ஏலம் மூலம் ரூ.844 கோடி வருவாய் - ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Sept 2022 7:01 AM IST

3 மாதங்களில் சொத்து ஏலம் மூலம் ரூ.844 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

ரெயில்வே வளாகங்களில் விளம்பரம் செய்தல், வாகன நிறுத்துமிடம், பார்சல் இடம் குத்தகை மற்றும் கட்டண கழிவறைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட ரெயில்வே நடவடிக்கை எடுத்தது. சிறிய தொழில்முனைவோர் மற்றும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பணிகளை கடந்த ஜூன் மாதம் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.

கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த இந்த ஏலத்தில் ரூ.844 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரெயில்வே கூறியுள்ளது. அந்தவகையில் 68 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட 8,500 சொத்துகள் தொடர்பான 1,200 ஒப்பந்தங்கள் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதில் ரெயில் நிலைய சுற்றுவட்டாரங்கள் மற்றும் ரெயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வதற்காக ரூ.155 கோடி, வாகன நிறுத்துமிட குத்தகை மூலம் ரூ.226 கோடி, பார்சல் இடம் குத்தகை மூலம் ரூ.385 கோடி, கட்டண கழிப்பிட ஏலம் மூலம் ரூ.78 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாக ரெயில்வே கூறியுள்ளது.

மேலும் செய்திகள்