< Back
தேசிய செய்திகள்
தனது உயிரை பணயம் வைத்து பயணியை காப்பாற்றிய ரெயில்வே காவலர்
தேசிய செய்திகள்

தனது உயிரை பணயம் வைத்து பயணியை காப்பாற்றிய ரெயில்வே காவலர்

தினத்தந்தி
|
23 Nov 2023 6:00 PM IST

ரெயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து ஒரு பயணியின் உயிரை காப்பாற்றியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

காந்திநகர்,

குஜராத்தில் உள்ள வாபி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர் தண்டவாளத்தின் இடையே தடுமாறி விழுந்தார்.

அந்த சமயத்தில் சூரத்-பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரெயில் அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது.

இதைக் கவனித்த வீராபாய் மேரு என்ற ரெயில்வே காவலர், நடைமேடையில் இருந்து குதித்து அந்த நபரை நோக்கி விரைந்து சென்றார். மின்னல் வேகத்தில் அந்த நபரை பிடித்து தண்டவாளத்திலிருந்து இழுக்க, அவர் நூலிழையில் உயிர் தப்பினர். அடுத்த வினாடி ரெயில் கடந்து சென்றது. ரெயில்வே காவலரின் துரித நடவடிக்கையால் விபத்து மற்றும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

ரெயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து ஒரு பயணியின் உயிரை காப்பாற்றியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

மேலும் செய்திகள்