< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தமா?- பொதுமக்கள் அதிர்ச்சி
|5 Nov 2023 10:55 AM IST
ரெயில்வே துறையில் 12 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
டெல்லி,
உலகின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரெயில்வே துறை உள்ளது. இதில் சுமார் 12 லட்சம் ரெயில்வே பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இதனை உடனடியாக அலம்படுத்த கோரி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர். இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்தவும் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் 12 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வர். இந்த வேலை நிறுத்தத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டால் ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.