< Back
தேசிய செய்திகள்
ரெயில்வே  ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பளம் - பதவி உயர்வு
தேசிய செய்திகள்

ரெயில்வே ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பளம் - பதவி உயர்வு

தினத்தந்தி
|
17 Nov 2022 11:25 AM IST

இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரெயில்வே உள்ளது. ரெயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன

புதுடெல்லி,

இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரெயில்வே உள்ளது. ரெயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன. இதில் கள பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் தூர இருப்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தனர். கொரோனா பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்களின் கோரிக்கை குறித்த முடிவுகள் தள்ளிபோனது.

தற்போது இக்கோரிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக ரெயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரெயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் ரெயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும்

மேலும் செய்திகள்