< Back
தேசிய செய்திகள்
ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
தேசிய செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

தினத்தந்தி
|
4 Jun 2023 11:15 AM IST

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-

இப்போது நமக்கு தெரிகிறது, வேகமாக சென்ற அந்த ரயில், அந்த தண்டவாளத்தில் சென்று இருக்க வேண்டிய ரயிலே இல்லை. அந்த தண்டவாளமே மெதுவான ரயில்களுக்கானது. ஆகவே, ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். பிரதமர் சொன்னால்தான் செய்வேன் என்று இருக்கக் கூடாது. பொருத்தமற்ற , திறமையற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் மோடி உலக புகழ் பெற்றவர். அதற்கான விலையையும் அவர் கொடுத்து இருக்கிறார். அதற்கு மற்றொரு உதாரணம் மணிப்பூர்' என்று தனது டுவிட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்