< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் பிரமுகர்களை கடத்தி மிரட்டிய ரவுடிகளுக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

காங்கிரஸ் பிரமுகர்களை கடத்தி மிரட்டிய ரவுடிகளுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

காங்கிரஸ் பிரமுகர்களை கடத்தி மிரட்டிய ரவுடிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

யஸ்வந்தபுரம்:-

பெங்களூரு யஸ்வந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய்குமார் மற்றும் உதய். இவர்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் ஆவார்கள். இந்த நிலையில் அவர்களை கடந்த மாதம் 9-ந் தேதி ரவுடி கும்பல் கடத்தியது. மேலும் அவர்கள் 2 பேரின் செல்போன்களையும் பறித்த கும்பல், அவர்களை மத்திகெரே பகுதியில் உள்ள விடுதியில் தங்க வைத்தனர். இதற்கிடையே அவர்களை காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படகூடாது என கூறி மிரட்டி உள்ளனர். இதையடுத்து 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்றைய நாளும் அவர்களை விடுவிக்காமல் அந்த கும்பல் அடைத்து வைத்துள்ளது. தேர்தலுக்கு மறுநாள் காலையில் அவர்களை அந்த கும்பல் விடுவித்துள்ளது.

இந்த நிலையில் விஜய்குமார் மற்றும் உதய் 2 பேரும் யஸ்வந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் தங்களை தேர்தல் சமயத்தில் காங்கிரஸ கட்சிக்கு ஆதரவாக பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக ரவுடி கும்பல் கடத்தியதாக கூறினர். எனினும் தங்களை அவர்கள் போலீசார் அடிக்கவில்லை எனவும், பணம் கொடுத்து தங்களை விலைக்கு வாங்க முயன்றதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை கடத்தியதாக பிரபல ரவுடிகள் மனோஜ், கெஞ்சன் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்