< Back
தேசிய செய்திகள்
கிரகலட்சுமி திட்ட தொடக்க விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு-மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தகவல்
தேசிய செய்திகள்

கிரகலட்சுமி திட்ட தொடக்க விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு-மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தகவல்

தினத்தந்தி
|
21 Aug 2023 2:12 AM IST

மைசூருவில் வருகிற 30-ந் தேதி நடைபெறும் கிரகலட்சுமி திட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார் என மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் கூறினார்.

மைசூரு:-

மந்திரி பேட்டி

மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நிருபர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்ைதகள் நலத்துறை மந்திரி லட்சுமி ெஹப்பால்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூறியிருந்த 5 வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இந்தநிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில், கிரகலட்சுமி திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா சொந்த மாவட்டமான மைசூருவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிரகலட்சுமி திட்டம் வருகிற 30-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மைசூரு டவுன் மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

கிரக லட்சுமி திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். அன்றே குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மந்திரி ஆய்வு

இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 1 கோடியே 95 லட்சத்து 4 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள். இதில், மைசூரு, குடகு, சாம்ராஜ் நகர், மண்டியா ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 13 லட்சத்து 81 ஆயிரத்து 430 பேர் பயன் அடைவார்கள். இவ்வாறு மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் கூறினார்.

முன்னதாக விழா நடைபெறும் மகாராஜா கல்லூரி மைதானத்தில் பணிகளை மந்திரி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி. மகாதேவப்பா, எம்.எல்.ஏ. கே. ஹரிஷ் கவுடா, டி.ரவிசங்கர், உள்பட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்